
அன்பு சகோதரிகளே, இனிய வணக்கம்!
"நம் பாரம்பரியத்தை நினைவுகூர்வோம்" என்ற இந்த அருமையான தலைப்பில், "இன்று நமது மூத்த அன்னையர்கள் நம்மோடு உரையாடினால் அவர்கள் என்ன கூறுவார்கள்?" என்ற கற்பனை வடிவிலான கலந்துரையாடலை வழங்கும் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்காக, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வரலாற்றுப் பதிவு அல்ல; நமது மூத்த அன்னையர்களின் ஆவியையும், சிந்தனையையும், அக்கறையையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கற்பனைப் பகிர்வு.
(தொலைபேசி உரையாடல்)
"ஹலோ சிஸ்டர்!"
"சொல்லுங்கள், மதர்!"
"நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி, இன்று மாலை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லா சகோதரிகளையும் அழைத்து வர மறக்காதீர்கள். அனைவருக்கும் நினைவூட்டுங்கள். நம் மதர் ஹவுசில் உள்ள அலெக்சிஸ் ஹாலில் சரியான நேரத்தில் கூடுவோம்."
"சரி மதர். எல்லோரிடமும் உடனே தெரிவிக்கிறேன்."
(கூட்டம் தொடங்குகிறது)
அன்பு சகோதரிகளே,
நாம் ஏற்கனவே தீர்மானித்தபடி, மறியின் ஊழியர் குடும்பத்துடன் நமது சபை இணைந்து பயணித்த நூற்றாண்டு நிறைவையும், இந்தத் தாயில்லத்தில் நாம் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் நன்றியுடன் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க இன்று ஒன்று கூடியுள்ளோம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடுவதற்கு முன்பாக, நமது கடந்தகாலப் பயணத்தை ஆழமாக ஆய்வு செய்து, நமது வாழ்வையும் பணியையும் சீர்திருத்தும் நோக்கில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
அந்தப் பொறுப்பை மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றி, பல்வேறு கருத்துகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து, அவற்றைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய சகோதரிகள் செல்வநாயகம், ஜாய் மற்றும் வர்ஷியா ஆகியோருக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போம்.
இப்போது, நாம் கொண்டாடவிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவிற்கு ஒரு பொருத்தமான கருப்பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே இதைப் பற்றி நீங்கள் அனைவரும் சிந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.
சகோதரி 1:மதர், "மகத்தான மானுடம்" என்ற தலைப்பை நான் யோசித்திருக்கிறேன்.
மதர்:அருமை! மிகவும் ஆழமான கருத்து. இந்தத் தலைப்பு நன்றாக இருக்கிறது.
சகோதரி 2:மதர், தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் வேறு தலைப்புகளையும் பரிசீலிக்கலாமே என்று தோன்றுகிறது.
சகோதரி 3:மதர், இன்று நாம் அனைவரும் மொபைல், கணினி, மடிக்கணினி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், காலத்தின் மாற்றங்களையும், திருச்சபையின் புதிய அழைப்புகளையும் முழுமையாக அறிந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
சமீப காலமாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் "மகத்தான மானுடம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி, மனித மாண்பு, தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயம் குறித்து திருச்சபை முழுவதும் ஆழமான சிந்தனையைத் தூண்டியிருக்கிறார். இன்று எல்லா இடங்களிலும் இந்தக் கருத்து பேசப்படுகிறது.
போப் லியோ அவர்களின் "மகத்தான மானுடம்" – மிகச் சுருக்கம்:
"ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர். மனித மாண்பையும், அன்பையும், நீதி மற்றும் சகோதரத்துவத்தையும் காக்கும் உலகை உருவாக்குவதே நமது அழைப்பு."
அல்லது இன்னும் சுருக்கமாக:
"மனித மாண்பை உயர்த்தி, அன்பு, நீதி, சகோதரத்துவம் நிறைந்த உலகை உருவாக்குவோம்."
எனவே, நமது விழாவிற்கும் "மகத்தான மானுடம்" என்ற கருப்பொருள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
மதர்:மிகவும் அருமையான கருத்து. அப்படியானால், நமது விழாவின் மையக் கருப்பொருளாக "மகத்தான மானுடம்" என்பதையே ஒருமனதாக ஏற்றுக்கொள்வோம்.
அனைவரும்:சரி, மதர்.
மதர்:அப்படியானால், இந்தக் கருப்பொருளை மையமாகக் கொண்டு விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமைய வேண்டும்.
தொடக்க ஜெபம், திருப்பலி, அலங்காரங்கள், தோரணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கண்காட்சி—எல்லாமே "மகத்தான மானுடம்" என்ற கருப்பொருளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட பொறுப்புகளைப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுங்கள். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, இந்த விழாவை நமது சபையின் வரலாற்றில் மறக்க முடியாத அர்த்தமுள்ள கொண்டாட்டமாக மாற்றுவோம்.
(தொலைபேசி உரையாடல் – நிகழ்ச்சி நிறைவுக்குப் பின்)
சகோதரி 1:
ஹலோ!
சகோதரி 2:
ஆ... சொல்லுங்கள், சிஸ்டர்.
சகோதரி 1:
மகிழ்ச்சி. இன்று மாலை மதிப்பீட்டுக் கூட்டம் (Evaluation Meeting) இருக்கிறது. ஞாபகம் இருக்கிறதல்லவா?
சகோதரி 2:
ஆமாம், சிஸ்டர். நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சகோதரி 1:
அதைவிட முக்கியமாக, இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்வாக, நமது மூத்த அன்னையர்கள் சபை முழுவதும் உள்ள சகோதரிகளிடம் ஒரு சிறப்புச் செய்தி வழங்க இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டதா?
சகோதரி 2:
ஆமாம், சிஸ்டர். அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்டோம்.
(மற்றொரு தொலைபேசி அழைப்பு)
சகோதரி:
ஹலோ, கஸ்பார்!
கஸ்பார்:
ஆ... சொல்லுங்கள், சிஸ்டர்.
சகோதரி:
இன்று மாலை நடைபெறும் மூத்த அன்னையர்களின் உரையை சபையிலுள்ள அனைத்து சகோதரிகளும் நேரலை (Live Streaming) மூலம் பார்க்க வேண்டும். அதற்கான இணைப்பை (Link) அனைவருக்கும் அனுப்பிவிட்டீர்களா?
கஸ்பார்:
ஆமாம், சிஸ்டர். எல்லோருக்கும் இணைப்பை அனுப்பிவிட்டேன்.
(மற்றொரு தொலைபேசி அழைப்பு)
சகோதரி:
ஹலோ, வினோதா!
வினோதா:
சொல்லுங்கள், சிஸ்டர்.
சகோதரி:
வினோதா, இப்போது எல்லோரிடமும் கைப்பேசி இருக்கிறது. ஆனால் பலரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிலர் அழைப்பை எடுப்பதில்லை; சிலர் செய்திகளையும் பார்ப்பதில்லை.
மார்த்தா, மரியா மற்றும் மற்ற சகோதரிகளிடம் நேரடியாகச் சொல்லுங்கள். அவர்களுக்கு நேரலைக்கான இணைப்பு அனுப்பியிருக்கிறோம். அவர்கள் எங்கு இருந்தாலும், எந்தப் பணியில் இருந்தாலும், இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இணையலாம்.
நமது மூத்த அன்னையர்கள், சபை முழுவதும் உள்ள சகோதரிகளிடம் நேரடியாக உரையாற்றப் போகிறார்கள். இந்த அரிய வாய்ப்பை யாரும் தவறவிடக் கூடாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
வினோதா:
நிச்சயமாக, சிஸ்டர். உடனே அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.
(நேரலை தொடங்குவதற்கு முன்)
சகோதரி: எல்லாம் தயாராகிவிட்டது. இன்னும் சில நிமிடங்களில் நேரலை தொடங்கப் போகிறது. சீக்கிரம் வாருங்கள்!
மற்றொரு சகோதரி: ஐயோ! இந்த நேரத்தில் பார்த்தால் இணைய இணைப்பே சரியாகக் கிடைக்கவில்லையே!
சகோதரி: பரவாயில்லை. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். அருகருகே அமர்ந்து, ஒரு திரையில் எல்லோரும் சேர்ந்து பாருங்கள். சீக்கிரம்..எல்லோரும் தயாராகுங்கள். நேரலை தொடங்கிவிட்டது!
***(நேரலை தொடங்குகிறது)***
மூத்த அன்னையர்:
அன்பு சகோதரிகளே, இனிய வணக்கம்!
நீங்கள் அனைவரும் நலமுடனும், இறையருளுடனும் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
விண்ணக மகிமையில் இறைவனோடு ஒன்றிணைந்திருக்கும் நமது சபையின் அன்புச் சகோதரிகளும், ஆறு மூத்த சகோதரிகளும் , மேலும் கடந்த காலங்களில் நமது சபையின் நிர்வாகப் பொறுப்பை அர்ப்பணிப்போடு ஏற்று வழிநடத்திய அனைத்து அன்னையர்களும், ஒரே உள்ளத்தோடு உங்களை அன்போடும் செபங்களோடும் வாழ்த்துகிறோம்.
இந்த அரிய சந்திப்பை நேரலை வழியாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று, அன்பான மகள்களாகிய உங்களோடு சில மனம் திறந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம்.
சகோதரிகள் (ஒருமித்த குரலில்):
நன்றி, மதர்!
இந்த அருமையான வாய்ப்புக்காக உங்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றிகள்.
உங்கள் அனுபவங்களையும், வழிகாட்டுதலையும், அன்பான அறிவுரைகளையும் கேட்பதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தயவுசெய்து எங்களோடு உரையாடுங்கள். உங்கள் வார்த்தைகள் எங்கள் துறவற வாழ்விற்கு ஒளியாகவும் ஊக்கமாகவும் அமையும்.
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.